உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரிப்பு – உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – தவிசாளர் எஸ்.சுதாகரன்

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

இவ்வாறு கட்டாக்காலியாக வீதிகளில் திரியும் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளினால் தொடர்ந்தும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அத்துடன், காட்டாக்காலி கால்நடைகள் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே, ஆடு, மாடு வளர்ப்பாளர்கள் தங்களுடைய கால்நடைகளை வீதிகளில் விடாமல் தங்களுடைய வீடுகளில் வளர்க்குமாறும் அல்லது மேய்ச்சல் நிலங்களுக்கு அனுப்பி அதனை பராமரிக்குமாறும் தவிசாளர் வேண்டிக் கொண்டுள்ளார்.

இந்த அறிவுறுத்தலை மீறி கால்நடைகளை வீதிகளில் விடும் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்

எங்களை விரட்டுவதற்கு செலவிட்ட பணத்தை கல்விக்கு கொடுங்கள் – சஜித்

கடந்த 24 மணித்தியாலயத்தில் 843 : 03