கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு,பகலாக வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தமிழ், முஸ்லிம் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சபையாகும்.
இந்த சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் மக்கள் தேவைகளை சபையின் தவிசாளர் எஸ்.சுதாகரன்
இரவு,பகல் பாராமல் நிறைவேற்றி வருகிறார்.
மின் விளக்கு பொருத்துதல், வடிகான் துப்பரவு செய்தல், திண்மக்கழிவு அகற்றுதல் போன்ற வேலைத்திட்டங்கள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன், தொடரில் வியாழக்கிழமை (9) இரவு பிறைந்துச்சேனை 206 – சீ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வடிகான் துப்பரவு செய்யும் பணிகள் பிரதேச சபை உறுப்பினர் ரீ.எல்.எம்.சித்தீக் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த வேலைகள் இடம்பெற்ற இடத்துக்குச் சென்று பார்வையிட்ட தவிசாளர் அப்பகுதி தேவைப்பாடுகளை பொதுமக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
தவிசாளரின் இந்த செயற்பாடு பிரதேச மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், தவிசாளருக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்