உள்நாடு

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்காளர்களின் வீடுகளுக்கே வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உரிய காலப்பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், தாம் வசிக்கும் பகுதியிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக் கொள்ள முடியுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாடசாலை மாணவி மீது தாக்குதல் – மூன்று பேரும் விளக்கமறியலில்

வீடியோ | இஸ்ரேலுக்கு எதிரான காணொளி தொடர்பாக இலங்கை மாணவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 9 மாதங்கள் தடுப்புக்காவல்

editor

அதிவேக வீதிகளில் மீண்டும் களமிறக்கப்படும் STF

editor