உள்நாடு

வாகனங்களை கையளிக்காத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை

(UTV|கொழும்பு) – பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்களை இதுவரை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை கையளிக்கப்படாத 11 வாகனங்கள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய தகவல்களுக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாகனங்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (07) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு ரிஷாட் கோரிக்கை

தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு