சூடான செய்திகள் 1வணிகம்

வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதால், வாகன இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதனால், வாகன இறக்குமதியின் போது, மேலதிகமாக 3 லட்சரும் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் உத்தேச பாதீட்டில் வாகனங்கள் தொடர்பில் வரி விதிக்கப்படாவிட்டால், தற்போதைய நிலைமைக்கு அமைய வாகனங்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு