உள்நாடு

வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன் கருவி

(UTV | கொழும்பு) – கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்கு பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம் விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இராஜகிரிய, நுகேகொடை, பொரள்ளை, காலி வீதி ஆகிய பிரதான வீதிகளில் விமானப் படையினரின் ட்ரோன் கருவிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

கொழும்பு புறநகர்ப் பகுதிகளுக்குள் வினைத்திறன் மிக்க போக்குவரத்து முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக பொலிஸாருடன் இணைந்து ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

Related posts

பனிஸ் வாங்க சென்ற 9 வயதுடைய பாடசாலை மாணவி விபத்தில் சிக்கி பலி – முல்லைத்தீவில் சோகம்

editor

வாகனங்களை பதிவு செய்வதற்கு TIN எண் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்..!

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு