உள்நாடு

வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த 13 முதல் இன்று காலை 6.00 மணிவரையான காலப் பகுதியில் 1,834 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை இன்று நண்பகல் முதல் நாளை காலை 6 மணிவரை செயல்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களில் செயல்படுத்தப்படும் என்றும் மது போதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் விசேட தேடுதல் நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் மது போதையில் வாகனத்தை செலுத்துவோருக்கு பிணை வழங்கப்படாது அவர்கள் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ISயில் பயிற்சிபெற்ற நான்கு இலங்கையர்கள்! நீர்கொழும்பு மற்றும் கொழும்பு நபர்கள் என அடையாளம்

கெஹெலியவின் வாயடைக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு