உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – 23 வயதுடைய இளைஞன் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் கிளிநொச்சி, பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

அனைத்து வணிகப் பொருட்களுக்கும் புதிய சட்டம்

இதுவரை 790 கடற்படையினர் குணமடைந்தனர்

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை