வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் இன்று (18.07) தெரிவித்தனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் பொலிசார் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவரிடம் இருந்து 3 கிராம் 300 மிலலி கிராம் ஐஸ்போதைப் பொருளும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவரிடம் இருந்து 266 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரிடம் இருந்து 230 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்க்கப்பட்டன.
இதனையடுத்து குறித்த மூவரும் பண்டாரிக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வவுனியா போதை ஒழிப்பு பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.