உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் 3 இளைஞர்கள் பயணித்த மோட்டர் சைக்கிள் விபத்தில் சிக்கியது – ஒருவர் பலி

வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (06) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டர் சைக்கிள் ஒன்றில் 3 இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

குறித்த மோட்டர் சைக்கிள் இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பஸ் தரிப்பு நிலையத்துன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குளளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைககிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான கோபால்ராஜ் நிலக்சன்என்பவரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related posts

கரையோர புகையிரத சேவைகள் பாதிப்பு

இன்று முதல் பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு

editor

தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்