உள்நாடுபிராந்தியம்

வவுனியாயில் கோர விபத்து – ஜேர்மன் பிரஜை பலி!

கனகராயன்குளம் பகுதியில் கனரக வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜேர்மன் பிரஜை ஒருவர் மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (19.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார்.

அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்து கனகராயன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கனகராயன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹெரி ஜயவர்தன காலமானார்

editor

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்