உள்நாடு

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று (21.05) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்றைய தினம் (21.05 பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற முற்ப்பட்ட போது கைது செய்துள்ளனர்.

காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரை நாளைய தினம் (22.05) வவுனியா நீதிமன்றில் முற்றப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அலரி மாளிக்கைக்கு அருகிலுள்ள வீதி திறப்பு

editor

இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து IMF இனது உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை

Live – பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

editor