உலகம்

வழமைக்கு நிலைக்கு திரும்பும் சீனாவின் வுஹான் நகரம்

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் உருவான சீன நகரமான வுஹானில், கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 தொற்று இல்லை என்று, சீன அரசின் செல்பேசி செயலி மூலம், உறுதிசெய்யப்பட்டவர்கள் மட்டும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வெளியூர் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று கொரோனா காரணமாக எந்த மரணமும் நிகழவில்லை என்பதுடன் செவ்வாயன்று சீன அரசு தெரிவித்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 23ஆம் திகதிக்கு பிறகு அந்நகரவாசிகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை விண்வெளிக்கு பயணமாகும் அமெரிக்க பாடகி

editor

கொரோனா : உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியது

மலேசியாவின் 17 ஆவது மன்னராக பதவியேற்றார் சுல்தான் இப்ராஹிம்!