உலகம்

வழமைக்கு திரும்பும் நியூசிலாந்து

(UTV |நியூஸிலாந்து ) – கொரோனா தொற்றினை சமூகத்திற்கு பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

அங்கு புதிதாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை, கடந்த பல நாட்களாக தனி இலக்கத்திலேயே பதிவாகுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தமது நாடு வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ஜசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகளை நியூஸிலாந்து தளர்த்துவதற்கு முன்பதாக இந்தத் தகவல் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினத்திலிருந்து அத்தியாவசிய தேவைகளற்ற வர்த்தக நிலையங்கள் சிலவற்றைத் திறப்பதற்கும் சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புரூணை, தனது பயணத் தடை பட்டியலில் இலங்கையினை சேர்த்தது

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து

உக்ரைன் விவகாரத்தில் முழுமையான போரை விரும்பவில்லை