உள்நாடு

வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கு அண்மித்தவாறு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகியுள்ளதால் இன்றும்(01) நாளையும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய டொலரின் பெறுமதி

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு பெற புதிய இணையவழி முறைமை – நிலுஷா பாலசூரிய

editor

கடந்த 24 மணித்தியால கொரோனா நோயாளர்களது விபரம்