உள்நாடுபிராந்தியம்

வர்த்தக நிலைய உரிமையாளர் கொலை – இருவர் கைது

சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும், அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து ஆயுதம் ஒன்றினால் வர்த்தக நிலைய உரிமையாளர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் சுண்ணாகம் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12,482 பேர் மீது வழக்கு

மாணவி தற்கொலை விவகாரம் முறையாக ஆராயப்படவில்லை – சபையில் ஏற்றுக்கொண்டார் பிரதமர் ஹரிணி

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்

editor