உள்நாடு

வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை வழங்கப்படும்

(UTV | கொழும்பு) –  வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை வழங்கப்படும்

எதிர்காலத்தில் அரசாங்க வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை வழங்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்த வரி விதிப்பிற்கு உள்ளாகவுள்ளனர். ஏனைய 90 சதவீத அரசு ஊழியர்களுக்கு இந்த வரி இல்லை.

எனவே, அரசாங்க வருமானம் அதிகரித்தால், இந்த சீர்திருத்தங்கள் மூலம் முதலில் அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்” – ரிஷாட் கோரிக்கை

திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை மீள எண்ணுமாறு தேசிய காங்கிரஸ் தேர்தல் ஆணைக்குழுக்கு மகஜர்

editor

20 நாள் சிசுவின் ஜனாஸா எரிப்பு : மார்ச்சில் விசாரணை