உள்நாடு

வரி செலுத்துனர்களுக்கான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும், அந்த மதிப்பீட்டாண்டுக்குரிய அனைத்து வருமான வரியினையும் , 2024 செப்டம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்தி முடித்தல் வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்த வேண்டிய அனைத்து நபர்களும், அந்த மதிப்பீட்டாண்டுக்குரிய அனைத்து வருமான வரியினையும் , 2024 செப்டம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாகச் செலுத்தி முடித்தல் வேண்டும்.

அவ்வாறு செய்யாவிடின், வருமான வரி செலுத்தாததற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படாது அல்லது குறைக்கப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2024 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன் நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் செலுத்தி முடிக்குமாறு வரி செலுத்துவோருக்கு நினைவூட்டப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த திகதிக்கு பிறகு, செலுத்தப்படாத தவறுகையில் உள்ள வரிகளுக்கு உள்நாட்டு இறைவரித் சட்ட நியதிகளுக்கு அமைவாக உள்ள சட்ட நடவடிக்கைகள் உள்ளடங்களாக கடுமையான சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலதிக தகவல்களுக்கு 1944 அல்லது அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால்

editor

ஆலோசனை மட்டத்தில் IMF

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தி