சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று…

(UTV|COLOMBO) 2019ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 3ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்று இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள உள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடப்படவுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளையதினம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிபபு மீதான குழுநிலை விவாதத்தில் 18 ஆவது நாள் இன்றாகும்

 

Related posts

249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து

BREAKING NEWS – முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

editor

அமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம்