அரசியல்உள்நாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹெரா – ஜனாதிபதி அநுர பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல மகா பெரஹெராவைப் பார்வையிட ஜனாதிபதி இணைந்துகொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரை மற்றும் ஸ்ரீ சுமன சமன் மகா விகாரையில் 2025 எசல மகா பெரஹெரவிற்காக நேற்று (06) பிற்பகல் மஹியங்கனை புனித ஸ்தலத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மத அனுஷ்டானங்களை நிறைவேற்றி ஆசிர்வாதம் பெற்றார்.

பின்னர் ஜனாதிபதி, அஸ்கிரி விஹாரை தரப்பின் சிரேஷ்ட குழு உறுப்பினர், மஹியங்கனை ரஜமகா விஹாரையின் விகாராதிபதி வண. உருளேவத்தே ஸ்ரீ தம்மரக்கித நாயக்க தேரரை சந்தித்து, அவரது நலம் விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

தேரர் இதன்போது, ஜனாதிபதிக்கு தனது ஆசிர்வாதங்களைத் தெரிவித்ததுடன், சிறப்பு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விஹாரை மற்றும் ஸ்ரீ சுமண சமன் மகா விகாரையின் 2025 எசல மகா பெரஹெராவின் நான்காவது ரந்தோலி பெரஹெராவின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஹஸ்தி ராஜா யானை மீது புனித கலசத்தை வைத்த ஜனாதிபதி, பிரதேச மக்களுடன் பெரஹெராவைக் காண இணைந்துகொண்டார்.

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதத் பலகல்ல மற்றும் அம்பிகா சாமுவேல் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் 2 இலட்சம் தேங்காய்கள் விநியோகம்

editor

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

2024 ஜனாதிபதி தேர்தல் – மாவட்ட ரீதியில் முழுமையான வாக்குப் பதிவு வீதங்கள்

editor