உள்நாடுபிராந்தியம்

வயல்வெளிக்கு சென்ற நபர் உயிரிழப்பு

பொல்பிதிகம கும்புகுலேவ பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வயலில் வரப்பு கட்டச் சென்றிருந்த குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், முன்னெடுத்த தேடுதலின் போது அவரது சடலம் வயல்வெளியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் குப்புற விழுந்து உயிரிழந்த நிலையில், காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மஹாவெவ வீதி கும்புகுலேவ பகுதியைச் சேர்ந்த 59 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள இன்றும் நீண்ட வரிசை.

editor

கட்சியின் தலைவர் யார் ? கூட்டத்தில் குழப்பநிலை – சுமந்திரன்

editor

இன்று இந்தியாவினால் 50 பஸ்கள் வழங்கிவைப்பு