அரசியல்உள்நாடு

வன உயிரினங்கள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை – அமைச்சர் கே.டி.லால்காந்த

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை (28) வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இந்த விடயத்தை தெரிவித்தார்.

Related posts

கரையோர வாழ் மக்கள் அவதானம்

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று

போதைப்பொருள் தடுப்புக்காக புதிய கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படும் – சாகல ரத்நாயக்க.