வத்தளை, ஹேகித்த பகுதியில் இரண்டு மாடி வீடு ஒன்றுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் நிரோஷன் பர்தின் நந்து என்ற 43 வயது நபர் ஆவார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான வெல்லே சாரங்கா எனப்படும் கமகே சாரங்கா பிரதீப்பின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக நபர்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.