வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றிரவு (08) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பிற பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
