சூடான செய்திகள் 1வணிகம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு

(UTV|COLOMBO) 2018ஆம், 2019 ஆம் ஆண்டுகளின் பெரும்போகத்தின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் செயற்பாடு நிறைவு பெற்றுள்ளது.

இதன்படி படைப்புழு தாக்கத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நட்டஈடும் வழங்கப்பட்டிருப்பதாக விவசாய காப்புறுதி சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுல வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் ஏக்கருக்கான நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட அம்பாறை, மொனறாகலை மற்றும் திருகோணமலை பிரதேச விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக  90 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பகுதியளவு பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு திறைசேரியிடம் இருந்து 60 கோடி ரூபா கோரப்பட்டுள்ளது எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

 

Related posts

நாட்டில் மொத்தமாக 50 பேர் குணமடைந்துள்ளனர்

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் பிரதமர் பதவியினை வழங்க ரிஷாத் பதியுதீன் ஆதரவு

அகில தனஞ்சயவின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடையுமா?