அரசியல்உள்நாடு

“வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம்” சாணக்கியன் பெருமிதம்

வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னாம் முடிவுக்கு வரவேண்டும் எனக்கோரி வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (18) வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தால் இடம்பெற்றது.

இவ் ஹர்த்தாலை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடுசெய்துள்ளதுடன் இந்த ஹர்த்தால் மூலம் வடக்கும் கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோசத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பெரும் மகிழ்ச்சியினை வெளிப்படுத்திவருவதுடன் இதனை ஊடகங்களிலும் பகிரங்கப்படுத்துவருவதால் முஸ்லிம் சார்பிலான தரப்பினர் இதற்கு கண்டங்களை வெளியிட்டுவருகின்றனர்.

சாணக்கியன் தங்களது கோசமாக”
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகம்..! என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது..! எமது மக்களுக்கான நீதி நிலை நாட்டப்படவேண்டும்.” என்ற கோசத்துடன் பகிரங்கப்படுத்திவருகின்றார்.

இதேவேளை, தமிழர்களின் தாயகம் வடக்கு கிழக்கு கோசத்தினை மையப்படுத்திய ஹர்த்தாலுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஆதரவுகளை வழங்குவதாக அறிவித்திருந்தாலும் முஸ்லிம் பகுதியில் இவ் ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 491 பேர் கைது

பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

ONLINE பரீட்சைகளுக்கு தடை