வகைப்படுத்தப்படாத

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

(UDHAYAM, COLOMBO) – வடகொரியா இன்று குறைந்த தூர போல்ஸ்டிக் ரக ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது வெற்றிக்கரமான ஏவுகணை பரிசோதனை இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இது ஜப்பானின் நிலப்பரப்பு திசையை நோக்கி ஏவப்பட்டதாக ஜப்பானிய தகவல்கள் தெரிவித்துள்ளன

இந்தநிலையில் குறித்த ஏவுகணை பரிசோதனை, வடகொரியாவின் ஏவுகணை வலிமையை காட்டும் வகையில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகளை தொடர்ந்தும் மீறி வடகொரியா இந்த ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

தென்கொரியா-அமெரிக்க ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி

குவாத்தமாலா ஜனாதிபதி ஜெரூசலத்தை ஏற்றுக்கொண்டார்