சூடான செய்திகள் 1

வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு…

(UTV|COLOMBO) வட பகுதிக்கான புகையிரத சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக அனுராதபுர புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணித்த ரயில் ஒன்று நேற்று(10) தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதினால் வட பகுதிக்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டியே இவ்வாறு தடம்புரண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் : நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல்

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த வாரம்…

டிசம்பர் 31க்கு முன்னர் வடக்கு, கிழக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு