உள்நாடு

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் ‘அசானி’ புயல்

(UTV | கொழும்பு) –  வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அந்தமான் நிக்கோபா் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை மறுநாள் வரை மூடப்பட்டுள்ளன.

எனவே அந்தமான், நிக்கோபாா் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related posts

முதலாவது அமைச்சரவை கூட்டம் புதனன்று

எதிர்வரும் காலங்களில் பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்

07 உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது – லங்கா சதொச நிறுவனம்