அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

லொஹான் ரத்வத்தவுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருந்தது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

நானும் லொஹான் ரத்வத்தயும் இருவேறு தரப்பில் அரசியல் செய்தாலும் எமக்கு இடையில் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மறைந்த லொஹான் ரத்வத்தவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

அந்த காலத்திலிருந்தே எனக்கு லொஹான் ரத்வத்தவை தெரியும்.

நாங்கள் இருவேறு தரப்பில் அரசியல் செய்தாலும் எங்களுக்குள் எந்தவித தனிப்பட்ட பகையும் இல்லை.

அத்துடன் லொஹான் ரத்வத்த, நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெருந்தோட்ட அமைச்சராக பணியாற்றினார். அவர் தனது கடமைகளை நன்றாக செய்தார்.

அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருந்தது. ஆனால் அவருடைய மரணம் விதியின் வழி என்றே சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்

Related posts

 பல்கலை கழக மாணவன் விடுதியில் உயிரிழப்பு!

சீராகும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்

கடந்த 24 மணித்தியாலத்தில் அதிக கொரோனா நோயாளிகள் பதிவு