உள்நாடு

லிஃப்ட் உடைந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

காலி பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு சொகுசு விற்பனை நிலையத்தில் உதவி முகாமையாளராக பணி புரிந்த 29 வயது இளைஞர் ஒருவர் லிஃப்ட் உடைந்து வீழ்ந்ததில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இன்று (30) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் அக்மீமனவில் வசிப்பவர் என தெரிய வந்துள்ளது.

இளைஞர் தரைத் தளத்திலிருந்து மூன்றாவது மாடிக்கு லிஃப்ட் வழியாக பொருட்களை எடுத்துச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் உடனடியாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனற்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

கோள் மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகின்றது!

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் தடைக்கு காரணம் முந்தைய அரசாங்கங்களே – அமைச்சர் குமார ஜயக்கொடி

editor