உள்நாடு

லங்காபுர பிரதேச செயலகம் மீண்டும் திறப்பு

(UTV|பொலன்னறுவை )- கொரொனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த லங்காபுர பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபை என்பன இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக லங்காபுர சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

லங்காபுர பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றில் பணியாற்றிய இருவர் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபை என்பன தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை

ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

மருதமுனை இரட்டைக் கொலை பாடமாக அமையுமா?