உள்நாடு

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (18) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ வெள்ளை கௌப்பி 750 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு 575 ரூபாவாகவும், ஒரு கிலோ 185 உருளைக்கிழங்கு ரூபாவாகவும், 425 கிராம் டின் மீன் 490 ரூபாவாகவும், ஒரு கிலோ கபில நிற சீனி 277 ரூபாவாகவும், பருப்பு 279 ரூபாவாகவும், ஒரு கிலோ கோதுமை மா 162 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]

தண்டப்பணம் மற்றும் விசா கட்டணங்களில் திருத்தம்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்ய தீர்மானம்