சூடான செய்திகள் 1

லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு

(UTV|COLOMBO) கொழும்பில் குறைந்த வசதிகளுடன் கூடிய பிரதேசங்களை புற நகர் பிரதேசமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன், நகர் புற மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று(12) பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் 384 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிகக் ரணவக்க போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 

 

 

Related posts

அரச வெசாக் உற்சவம் இன்றும்(17)  நாளையும்(18) ரத்பத் ரஜமஹா விஹாரையில்

நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை…

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் தொடர்பில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க