உள்நாடு

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மருமகனுக்கு பிணை

சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர், சந்தேக நபரை இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, அதே வழக்குக்காக தனுஷ்க வீரக்கொடி இன்று களுத்துறை மல்வத்த சிறைச்சாலையில் இருந்து மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து அண்மையில் பிணையில் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக புத்திக விதானவும் இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது, ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடியை 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

எண்ணெய் சுத்திகரிப்பு ஆரம்பம்!

கொ​ரோனா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன

மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று