உள்நாடு

ரோஸி யாழ். விஜயம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மாநகர முதல்வர் றோசி சேனநாயக்கா உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.

யாழ் மாநகர சபை மற்றும் வ.தென் மேற்கு பிரதேச சபைகளிற்கு பயணிக்கவுள்ளதோடு இரு சபைகளின் அனுபவங்களை பகிரும் வகையிலேயே இந்த பயணம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெறும் இந்தப் பயணத்தின்போது மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் சிநேகபூர்வ துடுப்பாட்டமும் இடம்பெறவுள்ளது.

இருநாள் பயணத்திற்காக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் என 70 பேர் இந்த பயணத்தில் பங்குகொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாய் மற்றும் மகன் மீதும் அசிட் தாக்குதல் – தாய் உயிரிழப்பு

editor

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் கெஹெலிய..!

தொழில்நுட்பக் கோளாறு – பயணித்துக் கொண்டிருந்த ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

editor