உள்நாடு

ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

(UTV | கொழும்பு) – ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திர ஜயசூரிய மூன்று மாதங்களுக்கு பயணத்தடையை நீக்கியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கடவுச்சீட்டை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகளுக்கு தடை

editor

இலங்கை தொடர்பான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம்

பிற்போடப்பட்ட பரீட்சை மீண்டும் நாளை ஆரம்பம்

editor