உள்நாடு

ராஜித மற்றும் பொன்சேகாவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் தவறான தகவல்களை மக்களுக்கு வெளியிட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பொதுமக்கள் பீதி அடையும் வகையில் அவர்கள் அறிவிப்புகளை மேற்கொண்டுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபரால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலயத்தில் 843 : 03

கொரோனா; நோயாளிகள் 592, குணமடைந்தோர் 134

குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.27