உள்நாடு

ராஜகிரிய விபத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் பலி

(UTV | கொழும்பு) – கொழும்பு, ராஜகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகடை மேம்பாலம் மற்றும் ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உப பரிசோதகர் (வயது 52) ஒருவரும் லொறியொன்றின் உதவியாளர் ஒருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவர் மீதும் வேகமாக பயணித்த வேன் மோதியதன் காரணத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் தலவத்தகொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை வெலிகடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

பிரதமரின் பொசொன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

“வீட்டுக்கு வீடு செல்ல தயாராகும் நாமல்”

மலையக மக்களுக்கு உரிமை இல்லை என யாரும் கூற முடியாது – ஜனாதிபதி அநுர

editor