உள்நாடுபிராந்தியம்

ராஜகிரிய பகுதியில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ராஜகிரிய பகுதியில் சுமார் 12 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பத்தரமுல்ல மதுவரித் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதன்போது 2 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பன்னிபிட்டிய, தலவத்துகொட பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சம்பவம் தொடர்பில் பத்தரமுல்ல மதுவரித் திணைக்களத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து

editor

ரத்கமவில் நால்வர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கு

சர்வதேச சட்டத்தரணிகள் கூட்டத்தொடரில் – இலங்கை சார்பில் அஜ்ரா அஸ்ஹர்.