உலகம்

ரஷ்யாவில் நிலநடுக்கம்

ரஷ்யாவில் கம்சட்கா பகுதியில் 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து, பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா பகுதிக்கு அருகிலுள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரத்திலேயே நிலநடுக்கம் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அலாஸ்காவின் அலூடியன் தீவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் பின்னர் அது பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால் நீக்கப்பட்டது.

ஹவாய், கனடாவின் பசிபிக் கடற்கரை மற்றும் அமெரிக்க நிலப்பகுதிக்கு ஆபத்தான அளவுக்கு உயர்ந்த சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், மையப்பகுதிக்கு அருகில் உள்ள ரஷ்யாவின் கடற்கரையில் சுனாமி அலைகள் இன்னும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உக்ரைனுக்கு ஆதரவாகும் இத்தாலி

இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் தலையில் சுடப்படுவார்கள்

ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகள்