உலகம்

“ரஷ்ய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும்”

(UTV |  நிவ்யோக்) – உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 19-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று ஒருபுறம் இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளின் ஜனாதிபதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

மறுபுறம் ரஷ்யாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு ரஷ்ய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என்று தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் உள்ள மக்களுக்கு பணம், உணவு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்றும் பைடன் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Related posts

பலி எண்ணிக்கையில் பிரேசிலுக்கு இரண்டாம் இடம்

பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு – இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்த மாலைதீவு

editor

அடங்கினார் இளவரசர் சார்லஸ்