கிசு கிசு

ரஷீத் கானின் மனைவி அனுஷ்கா ஷர்மாவா?

(UTV | கொழும்பு) – கூகுள் தேடுதலில் ரஷித் கானின் மனைவி என டைப் செய்தால் அனுஷ்கா ஷர்மாவின் விவரங்களை காட்டியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் ரஷித் கான். தனது அபார சுழற்பந்து வீச்சால் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக திகழ்கிறார்.

இந்த நிலையில், கூகுள் தேடுதலில் ரஷித் கானின் மனைவி என டைப் செய்தால் அனுஷ்கா ஷர்மாவின் விவரங்களை காண்பிக்கிறது. அத்துடன் ரஷித் கான் திருமணம் குறித்த தகவலில் திருமணம் ஆனதாகவும், மனைவி பெயர் அனுஷ்கா ஷர்மா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விராட் கோலி அனுஷ்கா ஷர்மா திருமணம் செய்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் ஆன திகதியை காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த 2018-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் செசனில் ரசிகர் ஒருவர் ரஷித் கானிடம் பிடித்த பாலிவுட் நடிகை யார்? எனக் கேட்ட கேள்விக்கு ரஷித் கான், அனுஷ்கா சர்மா மற்றும் பிரித்தி ஜிந்தா எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால், அனுஷ்கா ஷர்மா ரஷித் கானின் மனைவி எனத் வெளிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

No description available.

 

Related posts

கருவுக்கும் மங்களவுக்கும் அதிஷ்டம்

திரையரங்குகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம்

கோஹ்லிக்கு பெண் பிள்ளை : மொய்த்தது விளம்பர நிறுவனங்கள்