வகைப்படுத்தப்படாத

ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா பயணம்…

(UTV|INDIA)-ரஷியா நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

தலைநகர் புதுடெல்லியில் இந்தியா – ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். அவரது வருகையின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இந்தியாவுக்கு வருகை தரும் புதின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சில பிரதேசங்களுக்கு இன்று பலத்த மழை…

வடகொரியாவால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் மரணம்

Annette Roque officially calls it quit with husband Matt Lauer