விளையாட்டு

ரஷிய உலக கோப்பையில் முதல் சிவப்பு அட்டை

(UTV|RUSSIA)-ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து தொடரில், முதல் சிவப்பு அட்டை எச்சரிக்கை நேற்று நிகழ்ந்தது. ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் 3-வது நிமிடத்தில் கோல் நோக்கி வந்த பந்தை கையால் தடுத்ததால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார். இந்த உலக கோப்பையில் சிவப்பு அட்டையை பெற்ற முதல் வீரரான கார்லோஸ் சாஞ்சஸ், அடுத்த போட்டியில் விளையாட முடியாது.

உலக கோப்பை வரலாற்றில் காட்டப்பட்ட 2-வது அதிவேக சிவப்பு அட்டை இதுவாகும். இதற்கு முன்பு 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக உருகுவே வீரர் ஜோஸ் பாடிஸ்டா முதல் நிமிடத்தில் சிவப்பு அட்டை எச்சரிக்கைக்குள்ளானதே இந்த வகையில் முதலிடத்தில் இருக்கிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம்

இலங்கை அணியின் தலைவராக சுரங்க லக்மால் நியமிப்பு

பாகிஸ்தான் – இலங்கை மகளிர் கிரிக்கட் அணி ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்