உள்நாடுசூடான செய்திகள் 1

ரவி சேனவிரத்ன அதிரடியாக கைது!

(UTV | கொழும்பு) –

மது போதையில் வாகனத்தை செலுத்தி ஏனைய வாகனங்களுடன் மோதி சேதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை (28) இரவு வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவராக இவர் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

SEC யிற்கு புதிய தலைவர் நியமனம்

editor

பெளத்த பிக்குகள் அடங்கிய உயர்மட்டக்குழு பாகிஸ்தானுக்கு

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்