உள்நாடு

ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம் – வெளிநாடு செல்லவும் தடை விதிப்பு

அரசாங்க மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் ரவி குமுதேஷ் நிறுவன விதிகளை மீறி 2024 பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த இடைநீக்கம் அவர் வேட்புமனுவில் கையெழுத்திட்ட நாளான 10.10.2024 முதல் அமுலுக்கு வரும் என்றும், இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளமோ அல்லது கொடுப்பனவுகளோ வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு அவர் விதிகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

18 ஆம் திகதியுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு

editor

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் வாழ்த்து

editor