உள்நாடு

ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்

(UTV|COLOMBO) – ரயில்வே பாதுகாப்பு சேவையில் 180 புதிய அதிகாரிகளை இணைத்துக் கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று(29) இடம்பெற்ற எழுத்துப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என, ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சையில் சுமார் 19,000 பேர் தோற்றியுள்ள நிலையில், ரயில்வே பாதுகாப்பு சேவையில் 253 வெற்றிடங்கள் உள்ளதாகவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.

editor

நவம்பர் 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை விஜயம்

editor