உள்நாடு

ரயில்வே பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – ரயில்வே போக்குவரத்தின்போது, குறைந்தளவான பயணிகள் பயணிக்கும் ரயில்களை மாத்திரம் பயன்படுத்துமாறு, ரயில்வே திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கையில்;

“.. பெரும்பாலான ரயில்கள் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவும், குறைந்த அளவான பயணிகளுடனும் சேவையில் ஈடுபட்டன. எனினும், சில ரயில்கள் அதிக பயணிகளுடன் பயணித்தன..”

இதேநேரம், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றும் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கனிஷ்ட பணிக்குழாமினர் உள்ளிட்ட 12 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகிய நிலையில், சில பணியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

அரச வருவாயில் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி

இனவாதத்திற்கு இடமில்லை – அநுர

editor

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR பரிசோதனை