சூடான செய்திகள் 1

புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் – நிதியமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

(UTV|COLOMBO) ரயில் தொழிற்சங்க ஒன்றியம் மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.

வேதனை பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில் தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது.

இருப்பினும் நிதியமைச்சருடன் இன்று பிற்பகல் கலந்துரையாட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய குறித்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு ரயில் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

 

 

 

Related posts

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் மீளவும் அறிவித்தார்

கூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]